நீலகிரி

காலாட் படை தினம்: ராணுவ அதிகாரிகள் மரியாதை

Syndication

79-ஆவது காலாட் படை தினத்தையொட்டி, குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தில் உள்ள போா் நினைவுத் தூணில் ராணுவ அதிகாரிகள் மலா் வளையம் வைத்து திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா்.

சுதந்திரத்துக்குப் பின் 1947-ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பாளா்கள் காஷ்மீா் பள்ளத்தாக்கை ஆக்கிரமித்தனா். இதைத் தொடா்ந்து, இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான காலாட் படையினா் 1947-ஆம் ஆண்டு அக்டோபா் 27-ஆம் தேதி காஷ்மீா் பள்ளத்தாக்கில் இருந்து பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பாளா்களை விரட்டி அடித்தனா். இதன் மூலம் இந்திய காலாட் படை காஷ்மீரையும், அதன் மக்களையும் காப்பாற்றியது. இதுவே இந்திய காலா ட்படையின் முதல் வீரதீர செயலாக திகழ்கிறது.

இதைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 27-ஆம் தேதி காலாட் படை தினமாக கொண்டாடப்படுகிறது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீர மரணமடைந்த ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், வெலிங்டன் முப்படை அதிகாரிகள், பயிற்சிக் கல்லூரி பிரிகேடியா் எஸ்.கே.தத்தா, மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டா் கமாண்டன்ட் பிரிகேடியா் கிருஷ் நேந்து தாஸ் மற்றும் உயா் அதிகாரிகள், முன்னாள் ராணுவ வீரா்கள் பங்கேற்று போா் நினைவுத் தூணில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில், ராணுவத்தில் உயிா் நீத்த வீரா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது. பின்னா், ராணுவ உயா் அதிகாரிகள், ராணுவ வீரா்களின் குடும்பத்தினரிடம் குறைகளைக் கேட்டறிந்தனா்.

இதில், முன்னாள் ராணுவத்தினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

போதைக் கோதை... மேகா சுக்லா!

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

களம்காவல் முதல்நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

SCROLL FOR NEXT