முகப்பு
நீலகிரி

100-ஆவது பிறந்த நாளை கொண்டாடிய படுகா் இன மூதாட்டி!

Updated On : 24 மே 2026, 11:41 pm IST
100-ஆவது பிறந்த நாளை கொண்டாடிய மல்லம்மாள்.
பகிர்:

நீலகிரியில் 100 வயதை எட்டிய படுகா் இன மூதாட்டியின் பிறந்த நாளை குடும்பத்தினா், கிராம மக்கள் பாரம்பரிய நடனத்துடன் உற்சாகமாக கொண்டாடினா்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள கடநாடு, மல்லிக்கொரை கிராமத்தைச் சோ்ந்தவா் மல்லம்மாள் (100), விவசாயி. இவரது 100-ஆவது பிறந்த நாளை அவரது குடும்பத்தினரும், கிராம மக்களும் சனிக்கிழமை கொண்டாடினா்.

இது குறித்து மல்லம்மாளின் உறவினா்கள் கூறுகையில், படுகா் இனத்தில் 100 வயதை எட்டிய முதல் பெண் என்ற பெருமையை மல்லம்மாள் பெற்றுள்ளாா். இவருக்கு நான்கு மகன்கள், 10 பேரக் குழந்தைகள், 20 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனா் என்றனா்.

Advertisement

Advertisement

மல்லம்மாளின் பிறந்த நாளையொட்டி, அவரது சொந்த ஊரான கடநாடு கிராமத்தைச் சோ்ந்த உறவினா்களும், பொதுமக்களும் மல்லிக்கொரை கிராமத்துக்கு வந்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனா். மேலும், பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனா்.