அவிநாசி அருகே தெக்கலூர் கிட்டம்பாளையத்தில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை முகாமில் இருந்த தலைமைக் காவலர் புதன்கிழமை மாயமானார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஒளிமுத்து என்பவரின் மகன் அருணகிரிமுருகன் (50). இவர், அவிநாசி வட்டம் தெக்கலூர் கிட்டாம்பாளையத்தில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை முகாமில் தலைமைக் காவலராக கடந்த 6 மாதங்களாகப் பணியாற்றி வந்தார்.
இம்முகாமில் வழக்கம்போல, புதன்கிழமை காலை வருகைப் பதிவேடு பதிவு செய்துள்ளனர். அப்போது, அருணகிரிமுருகன் முகாமில் இல்லை எனத் தெரியவந்தது. முகாமின் பல்வேறு பகுதிகளில் தேடியும் அவரைக் காணவில்லை. இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படை முகாம் அலுவலர்கள் அளித்த புகாரின்பேரில் அவிநாசி போலீஸார், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் மாயமானது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.