திருப்பூர்

சிங்கனூரில் மதுக் கடையை அகற்றக் கோரி மறியல்

பல்லடம் அருகே சிங்கனூரில் மதுக் கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

DIN

பல்லடம் அருகே சிங்கனூரில் மதுக் கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பல்லடம் அருகே பொங்கலூரில் செயல்பட்டு வந்த மதுக் கடை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டது. அந்த மதுக் கடை, மாதப்பூர் ஊராட்சி சிங்கனூரில் சாலையோரம் உள்ள ஒரு தோட்டத்து சாலையில் கடந்த சில நாள்களுக்கு முன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டது. இந்த மதுக் கடையை அகற்ற வலியுறுத்தி அக்கிராம மக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாதப்பூர் சுங்கச் சாவடி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் பல்லடம் வட்டாட்சியர் சாந்தி, டாஸ்மாக் துணை மேலாளர் குணசேகரன் ஆகியோ பேச்சுவார்த்தை நடத்தினர். மதுக் கடையை அகற்றுவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என உறுதி அளித்தனர். அதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலரை வியாழக்கிழமை (ஜூன் 8) நேரில் சந்தித்து கிராம மக்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT