திருப்பூர்

தேர்த் திருவிழா: தாற்காலிகப் பேருந்து நிலையம் இடம் மாற்றம்

விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவப் பெருமாள் கோயில்களின் தேர்த் திருவிழாயொட்டி, தாற்காலிக புறநகர் பேருந்துகள் நிறுத்துமிடம் இடம் மாற்றப்பட்டுள்ளது.

DIN

விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவப் பெருமாள் கோயில்களின் தேர்த் திருவிழாயொட்டி, தாற்காலிக புறநகர் பேருந்துகள் நிறுத்துமிடம் இடம் மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி:
மேம்பாலப் பணிகள் காரணமாக, சேலம், ஈரோடு, ஊத்துகுளி வழியாக இயக்கப்படும்
புறநகரப் பேருந்துகள், காமராஜர் சாலையில் வீரராகவப் பெருமாள் கோயில் அருகே அமைக்கப்பட்டுள்ள தாற்காலிகப் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், வீரராகவப் பெருமாள் கோயில் வைகாசி தேர்த் திருவிழாவையொட்டி தேரோட்டம் ஜூன் 8-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. தேரோட்டம் நடைபெறுவதால் வியாழக்கிழமை மட்டும் சேலம், ஈரோடு, ஊத்துகுளி வழியாக இயக்கப்படும் புறநகர்ப் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT