திருப்பூர்

மதுக் கடையை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருப்பூர் அருகே பொங்குபாளையத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட மதுக் கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி பெண்கள் உள்ளிட்டோர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

திருப்பூர் அருகே பொங்குபாளையத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட மதுக் கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி பெண்கள் உள்ளிட்டோர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் அருகே பொங்குபாளையம் கிராமத்தில், முட்டியங்கிணறு வழியாக பெருமாநல்லூர் செல்லும் சாலையில் புதிதாக மதுக் கடை திறக்கப்பட்டுள்ளது.
அங்கு மதுக் கடை அமைக்க பணிகள் நடைபெற்றபோதே, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஊர் மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.
மேலும், கடந்த மே முதல் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மதுக் கடை அமைக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனாலும், ஊர் பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி கடந்த மே 26-ஆம் தேதி மதுக் கடை திறக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த பொங்குபாளையம் மக்கள், மதுக் கடைக்கு பூட்டுப் போடும் போராட்டம் புதன்கிழமை (ஜூன் 7) நடைபெறும் என ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதன்கிழமை காலை அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மதுக் கடைக்குப் பூட்டுப் போடுவதற்காக புறப்பட்டபோது, அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக போலீஸார் உறுதியளித்தனர்.
அதையடுத்து, மதுக் கடையை மூட வலியுறுத்தி பொங்குபாளையத்தில் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினரும், ஊராட்சி முன்னாள் துணைத் தலைவருமான எஸ்.அப்புசாமி தலைமை வகித்தார். பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த இடத்தில் உள்ள மதுக் கடையை மூடுவது குறித்து திருப்பூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஜூன் 8) பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

SCROLL FOR NEXT