திருப்பூர்

அண்ணமார் கோயிலில் வருண ஜபம்

வெள்ளக்கோவில், அனுமந்தபுரம் அருகே பூலாம்பரப்பு ஸ்ரீஅண்ணமார் சுவாமி கோயிலில் வருண ஜபம், யாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

வெள்ளக்கோவில், அனுமந்தபுரம் அருகே பூலாம்பரப்பு ஸ்ரீஅண்ணமார் சுவாமி கோயிலில் வருண ஜபம், யாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 மழை வேண்டி ஊர் பொதுமக்கள் சார்பில் வருண ஜபம், யாகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் வள்ளியிரச்சல், புஷ்பகிரி வேலாயுதசுவாமி கோயில் தலைமை அர்ச்சகர் கு.தண்டபாணி சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் தொட்டியில் கழுத்தளவுத் தண்ணீரில் நின்று மந்திரங்களை ஓதினர். முதலில் கணபதி பூஜை, அதைத் தொடர்ந்து புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், வருண ஜபம், வருண யாகம், தீபாராதனை நடைபெற்றன. இதில், 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

சக மாணவா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT