திருப்பூர்

சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

வெள்ளக்கோவில், வாய்க்கால்மேட்டுப்புதூரில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

DIN

வெள்ளக்கோவில், வாய்க்கால்மேட்டுப்புதூரில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
 இக்கோயில் திருப்பணிகள் நிறைவடைந்ததையொட்டி, கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சிவன்மலை பிரதான அர்ச்சகர் ராஜகணபதிவாமதேவ சிவாச்சாரியார் தலைமை வகித்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.
 சிவன்மலை சிவசுந்தர சந்தோஷ் சிவம், சிவஸ்ரீதர் குருக்கள் ஆகியோர் சர்வசாதகம் செய்தனர். முன்னதாக தீர்த்தம் எடுத்து வந்து முளைப்பாலிகை வழிபாடு, ஹோம, தன, கோ பூஜைகள், மூன்று கால யாகசாலை பூஜைகள், யந்திர ஸ்தாபனம் போன்றவை நடைபெற்றன. பின்னர் காலை 10.30 மணிக்கு விமான கோபுரக் கலசங்கள், விநாயகப் பெருமான் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT