திருப்பூர்

மாணவனை அடித்த ஆசிரியை: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

அவிநாசி, காசிகவுண்டன்புதூர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவனை அடித்த ஆசிரியையை கண்டித்து பெற்றோர் அப்பள்ளியை புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

DIN

அவிநாசி, காசிகவுண்டன்புதூர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவனை அடித்த ஆசிரியையை கண்டித்து பெற்றோர் அப்பள்ளியை புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
 அவிநாசி, காசிகவுண்டன்புதூர் ஆதிதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் வசந்த் (8). இவர் அவிநாசி அருகே காசிகவுண்டன்புதூர் அரசு நடுநிலைப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் வீட்டு பாடம் எழுதாமல் வந்ததால், பள்ளி ஆசிரியை, வசந்தை தலைமையாசிரியரிடம்  செவ்வாய்க்கிழமை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தலைமையாசிரியர் மாணவர், வசந்தை கண்டித்து குச்சியால் அடித்துள்ளார். இதுகுறித்து வசந்த் பெற்றோரிடம் கூறியதையடுத்து, மாணவனின் பெற்றோர் பள்ளியை புதன்கிழமை காலை முற்றுகையிட்டனர்.
மேலும், மாணவன் வசந்த் ஏற்கெனவே உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளதால், அடிக்கக் கூடாது என தெரிவித்தனர். இதையடுத்து கல்வி நிர்வாகத்தினர், பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இனிமேல் இது போல நடக்காது எனத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

திருமணம் கைவிடப்பட்டது... அறிக்கை வெளியிட்ட ஸ்மிருதி மந்தனா!

SCROLL FOR NEXT