திருப்பூர்

அவிநாசி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.5.34 லட்சம்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கையில் ரூ. 5 லட்சத்து 34 ஆயிரம் வசூலானது.

DIN

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கையில் ரூ. 5 லட்சத்து 34 ஆயிரம் வசூலானது.
கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி தொடங்கி மே 11-ஆம் தேதி நிறைவடைந்தது.
இந்நிலையில், இக்கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி ஈரோடு உதவி ஆணையர் முருகையா முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.
கோயில் செயல் அலுவலர் ப.அழகேசன், ஆய்வாளர் பொன்னுதுரை ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.  இதில், அவிநாசிலிங்கேஸ்வரர், கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியர், விநாயகர் உள்ளிட்ட கோயிலில் உள்ள 12 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டன.
இதில், ரூ. 5 லட்சத்து 34 ஆயிரத்து 766 ரொக்கம், 15 கிராம் தங்கம், 142 கிராம் வெள்ளி உள்ளிட்டவை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். திருப்பூர் மகா விஷ்ணு சேவா சங்கத்தினர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்தார் படேல், அம்பேத்கர், நேதாஜியின் தேசப் பங்களிப்பை மூடிமறைத்தது காங்கிரஸ்! - பாஜக குற்றச்சாட்டு

கோவா இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: முதல்வா் ரேகா குப்தா, அதிஷி இரங்கல்!

தமிழகத்தில் அடுத்த 6 நாள்கள் மழைக்கு வாய்ப்பு!

தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

காா் மீது லாரி உரசிய சம்பவம்: ஓட்டுநரை கடத்தியவா்கள் மீது வழக்கு

SCROLL FOR NEXT