பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவ விருப்பமுள்ளவர்கள் உதவலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் இளைஞர் நீதி (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி, எளிதில் பாதிப்புக்குள்ளாகக் கூடிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள் மற்றும் சட்டத்துக்கு முரணான குழந்தைகளின் நலனை மேம்படுத்தவும், இக்குழந்தைகளுக்கு மறுவாழ்வு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் உதவ விருப்பமுள்ள தனியார் தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உதவிகள் செய்யலாம்.
உதவிகள் செய்ய விரும்புவோர் தமிழ்நாடு அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையால் உருவாக்கப்பட்ட இளைஞர் நீதி நிதி என்னும் வங்கிக் கணக்குப் பெயரில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ராஜரத்தினம் கிளை, சென்னை, கணக்கு எண்: 358001000000671-இல் நன்கொடை அளித்து உதவலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.