திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இதில், இறகுப் பந்துப் போட்டியில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார், சம்பத்குமார், கணேசன், தங்கம், தமிழரசன் ஆகியோர் இரண்டாமிடமும், குண்டு எறிதலில் சம்பத்குமார் இரண்டாமிடமும், மாசிலாமணி மூன்றாமிடமும் பெற்றனர்.
இவர்களுக்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜாசண்முகம் தலா ரூ. 3 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை பரிசாக கொடுத்துள்ளார். இந்த உபகரணங்களை ஆட்சியர் ஜெயந்தி விளையாட்டு வீரர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.