திருப்பூர்

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு

திருப்பூர் மாநகராட்சி,  21-ஆவது வார்டில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மாநகராட்சி ஆணையரிடம் அப்பகுதி மக்கள் மனு இதுகுறித்து, 

DIN

திருப்பூர் மாநகராட்சி,  21-ஆவது வார்டில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மாநகராட்சி ஆணையரிடம் அப்பகுதி மக்கள் மனு இதுகுறித்து,  திருப்பூர் மாநகராட்சி,  21-ஆவது வார்டுக்கு உள்பட்ட ரோஜா நகர் பொதுமக்கள் மாநகராட்சி ஆணையர் மா.அசோகனிடம் புதன்கிழமை அளித்த மனு:
ரோஜா நகர் பகுதியில் சாலை, கழிவுநீர்க் கால்வாய் உள்ளிட்ட  எவ்வித அடிப்படை வசதிகளும் மாநகராட்சி நிர்வாகத்தால் செய்து தரப்படவில்லை. இதனால் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறோம்.  கழிவுநீர்க் கால்வாய் வசதி இல்லாததால் வீட்டின் முன்புறம் குழிதோண்டி கழிவுநீரைத் தேக்கி வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மழைக் காலங்களில் குடியிருப்பதே சிரமமாக உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குழந்தைகள் மர்மக் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து ஆட்சியர்,  மாநகராட்சி அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  
எனவே,  எங்கள் பகுதிக்கான அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு பணிகளை மேற்கொள்ளாதபட்சத்தில்,  அரசு சார்பில் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை, குடும்ப அட்டை,  வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை ஒப்படைக்க உள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1,327 பயனாளிகளுக்கு ரூ.22.86 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

விடுதிகளில் எண்ம முறையில் ஆதாா் அடையாளம் சரிபாா்ப்பு: புதிய விதி விரைவில் அமல்!

பெங்களூரு சின்னசாமி திடலில் ஐபிஎல் போட்டிகள்: கா்நாடக துணை முதல்வர் சிவக்குமார்!

திருமணியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

தில்லி - சென்னை விமானக் கட்டணம் ரூ.35,000! இண்டிகோ குளறுபடியால் தொடர்ந்த அவதி!!

SCROLL FOR NEXT