திருப்பூர்

அவிநாசி அருகே சாலை விபத்து: 2 இளைஞர்கள் சாவு

அவிநாசி அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தென்னை மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 2  இளைஞர்கள் உயிரிழந்தனர்.

DIN

அவிநாசி அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தென்னை மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 2  இளைஞர்கள் உயிரிழந்தனர்.
அவிநாசி ஒன்றியம்,  தெக்கலூர் ஊராட்சி ஏரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி மகன் சதீஷ்குமார்(26). அதே பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மகன் திருமூர்த்தி(26). நண்பர்களான இவர்கள் இருவரும் தெக்கலூர் நல்லிக்கவுண்டன்பாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில்,  வழக்கம்போல இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு,  இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திரும்பிக் கொண்டிருந்தனர். ஏரிப்பாளையம் அருகே வரும்போது,  கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த தென்னை மரத்தின்மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமார்,  திருமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர். இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT