திருப்பூர்

நிதி நிறுவன அதிபரை தாக்கிய 4 பேர் கைது

தாராபுரத்தில் நிதி நிறுவன அதிபரைத் தாக்கியதாக 4 பேரை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

DIN

தாராபுரத்தில் நிதி நிறுவன அதிபரைத் தாக்கியதாக 4 பேரை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
தாராபுரம் அருகே கோனேரிபட்டி பூசாரி அய்யன் தோட்டத்தைச் சேர்ந்தவர் சிவபாலசுந்தர்(21).  இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குலுக்குப்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரிடம் பணியாற்றி தற்போது தனியாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில்,  உடல் நலம் பாதிக்கப்பட்டு தாராபுரம் மருத்துவமனைக்கு வந்த சிவபாலசுந்தரை சதீஷ்குமாரின் உறவினர்கள் ஆனந்தன்,  வெங்கடேஷ் உள்பட 4 பேர் தாக்கினார்களாம். இதில் காயமுற்ற சிவபாலசுந்தர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிந்த தாராபுரம் காவல் துறையினர் ஆனந்தன் உள்பட 4 பேரைக் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT