முகப்பு
திருப்பூர்

ஜெயலலிதா பிறந்த நாள்: 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம்; பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

Updated On : 25 பிப்ரவரி 2019, 10:27 am IST
பகிர்:


திருப்பூர்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அளிக்கப்பட்டது.
  திருப்பூர் டவுன்ஹாலில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு, 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து திருப்பூர் அரசு மருத்துமனையில் பிறந்த 12 குழந்தைகளுக்கு தலா ஒரு தங்க மோதிரம், வெள்ளிக் கொலுசு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
  இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர்கள் சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கே.என்.விஜயகுமார்(திருப்பூர் வடக்கு), கரைப்புதூர் நடராஜன்(பல்லடம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  மாவட்ட துணைச் செயலாளர் சண்முகம்,  முன்னாள் மண்டல தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், மார்க்கெட் சக்திவேல், கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, பட்டுலிங்கம், கருணாகரன், கணேஷ், ஏ.எஸ்.கண்ணன், கலைமகள் கோபால்சாமி,  கே.என்.சுப்பிரமணியம், புத்தரச்சல் பாபு, உஷா ரவிக்குமார், தம்பி சுப்பிரமணியம், சிட்டி பழனிசாமி,  கீதா, சித்துராஜ், ராமமூர்த்தி, காலனி செல்வராஜ், ஏ.எம்.ராமமூர்த்தி, பரமராஜன், ஷாஜஹான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.