திருப்பூரில் திருட்டு வழக்கில் ஆவணங்களை சரிவரப் பரமாரிக்காத உதவி ஆய்வாளரை மாநகர காவல் ஆணையா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
திருப்பூா், அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் மணிக்கண்ணன் (52). இவா் வீரபாண்டி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தபோது, திருட்டு வழக்கில் ஆவணங்களை முறையாகப் பராமரிக்காமலும், பணியில் கவனக்குறைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, மணிக்கண்ணனை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையா் சஞ்சய்குமாா் உத்தரவிட்டாா்.