பத்தாம் வகுப்பு தேர்வில் 500 மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு காங்கயம் ஊராட்சி ஒன்றிய ஆணையர், ஒன்றியக்குழு தலைவர் ஆகியோர் வியாழக்கிழமை கேடயம் வழங்கிப் பாராட்டினர். 
திருப்பூர்

பத்தாம் வகுப்பு தேர்வு: முழு மதிப்பெண் பெற்ற காங்கயம் மாணவிக்கு பாராட்டு

பத்தாம் வகுப்பு தேர்வில் 500 மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு காங்கயம் ஊராட்சி ஒன்றிய ஆணையர், ஒன்றியக்குழு தலைவர் ஆகியோர் வியாழக்கிழமை கேடயம் வழங்கிப் பாராட்டினர்.

DIN

காங்கயம்: பத்தாம் வகுப்பு தேர்வில் 500 மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு காங்கயம் ஊராட்சி ஒன்றிய ஆணையர், ஒன்றியக்குழு தலைவர் ஆகியோர் வியாழக்கிழமை கேடயம் வழங்கிப் பாராட்டினர்.

காங்கயம் ஒன்றியம், பொத்தியபாளையம் ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்த மாணவி ஸ்ரீ மிகா, காங்கயம் தாலுகா, முத்தூரில் உள்ள விவேகானந்தா வித்தியாலயா மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வெழுதியுள்ளார். இந்நிலையில், இத்தேர்வில் இவர் 500-க்கு 500 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மாணவி ஸ்ரீ மிகா வின் இல்லத்திற்கு காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார், ஊராட்சி ஒன்றிய ஆணையர் எஸ்.ரமேஷ் உள்ளிட்டோர் நேரில் சென்று, முழு மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு பாராட்டுத் தெரிவித்து, நினைவுக் கேடயம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ப.மகுடேஸ்வரி மற்றும் மாணவியின் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆந்திர மாநிலத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 220 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

மனைவியை குத்திக் கொலை செய்த கணவா்

குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவா் கைது

கொடிநாள் நிதி வசூல்: செங்கல்பட்டு ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

முன்னாள் படைவீரா்களுக்கு நலத்திட்ட உதவி: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்!

SCROLL FOR NEXT