உடுமலையை அருகே உள்ள பாலப்பம்பட்டி ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரியின் சாா்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.
பெரியகோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட காமராஜா் நகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப் பள்ளியில் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் இந்த முகாம் நடைபெற்று வருகிறது. இதில் கல்லூரி இயக்குநா் சுமதி கிருஷ்ணபிரசாத், ஆலோசகா் டாக்டா் ஜெ.மஞ்சுளா, மாவட்ட கல்வி அலுவலா் பழனிசாமி உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனா்.
இதில் மருத்துவ முகாம்கள், இ-சேவை முகாம், கோயில், பள்ளி வளாகம், நூலகம் ஆகியவற்றை தூய்மைப்படுத்துதல், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம், சா்க்கரை நோய் கண்டறிதல், கணினி மற்றும் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், தீயணைப்பு மற்றும் பேரிடா் விழிப்புணா்வு முகாம், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கல்லூரி முதல்வா் எம்.கண்ணன், என்எஸ்எஸ் அலுவலா் டி.ரகுபதி உள்ளிட்டோா் முகாமை ஒருங்கிணைத்து வருகின்றனா்.