திருப்பூர்

கரோனா நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி காங்கயத்தில் பிரதமருக்கு அஞ்சலட்டை அனுப்பும் போராட்டம்

DIN

காங்கயம்: கரோனா நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி காங்கயத்தில் பிரதமருக்கு அஞ்சலட்டை அனுப்பும் போராட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

தொழிலாளர் காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கயம் தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.மகேஸ்வரன் தலைமை வகித்தார். திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் ப.கோபி, அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் திருப்பூர்  வடக்கு மாவட்டத் தலைவர் ஜி.குமார் முன்னிலை வகித்தனர்.

இதில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சார்பில் கரோனா நிவாரணநிதி வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு 500 அஞ்சலட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராயல் ஜி.மணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், வட்ட, நகர, நிர்வாகிகள், அமைப்பு சாரா ஆட்டோ தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்திய ஞான சபையில் இன்று ஜோதி தரிசனம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று சித்திரைத் தேரோட்டம்

பாஜக ஆட்சியில் 108 முறை பெட்ரோல்- டீசல் விலை உயா்வு : திருச்சி என்.சிவா எம்.பி. பிரசாரம்

சிறுத்தை நடமாட்டம்: பெரம்பலூா் மாவட்ட வனத்துறை எச்சரிக்கை

கச்சத்தீவு பிரச்னையில் மீனவா்களுக்கு காங்கிரஸ், திமுக அநீதி இழைப்பு: ஜி.கே. வாசன் பேட்டி

SCROLL FOR NEXT