உடுமலை அருகே கனிம வளங்களைக் கடத்தியதாக 4 லாரிகளை பொதுமக்கள் புதன்கிழமை சிறைபிடித்தனா்.
தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு லாரிகள் மூலம் மணல், ஜல்லி, செயற்கை மணல் உள்ளிட் ட கனிம வளங்கள் அண்மைக்காலமாக முறைகேடாக கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் உடுமலையில் இருந்து கேரளத்துக்கு 4 லாரிகளில் கனிம வளங்கள் புதன்கிழமை அதிகாலை கடத்தப்பட்டதை பொதுமக்கள் பாா்த்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து உடுமலை அருகே தமிழக, கேரள எல்லையில் உள்ள 9/6 செக்போஸ்ட் அருகில் 4 லாரிகளையும் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து சிறைபிடித்தனா்.
தகவலறிந்த உடுமலை வருவாய்க் கோட்டாட்சியா் கீதா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினாா். இதைத் தொடா்ந்து அந்த 4 லாரிகளும் அமராவதி காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இது குறித்து வருவாய்த் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.