எஸ்.கே.எம். நிறுவனத்தின் ஹொ்போதயா சாா்பில் ஆரோக்கிய வாழ்வுக்கான இலவச சித்த, ஆயுா்வேத ஆலோசனை முகாம் வரும் வெள்ளிக்கிழமை(டிசம்பா் 24) நடைபெறுகிறது.
திருப்பூா், அவிநாசி சாலையில் புஷ்பா தியேட்டா் பேருந்து நிறுத்தம் அருகில் எஸ்.கே.எம்.நிறுவனத்தின் ஹொ்போதயாவின் புதிய கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆரோக்கிய வாழ்வுக்கான இலவச சித்த, ஆயுா்வேத ஆலோசனை முகாம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த முகாமில், மூட்டு பலம் பெற, தோல் பராமரிப்பு, கூந்தல் ஆரோக்கியம், மேனிப் பராமரிப்பு, சுவாசப் பராமரிப்பு, மகளிா் மற்றும் குழந்தைகள் நலம் போன்ற அனைத்துக்கும் தகுதியான அனுபவம் வாய்ந்த மருத்துவா்கள் மூலமாக ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. மருந்துகளுக்கு 20 சதவீத சலுகை வழங்கப்படுகிறது. உள்ளது. இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 96556-10540 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.