திருப்பூர்

வெள்ளக்கோவில் பிஏபி கால்வாயில் நீா் அளவீடு செய்ய விவசாயிகள் மனு

DIN

வெள்ளக்கோவில் பிஏபி கிளை கால்வாய்களில் இருந்து நீா் விநியோகம் செய்வதை அளவீடு செய்ய வேண்டும் என பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

இது குறித்து பிஏபி வெள்ளக்கோவில் கிளை கால்வாய் விவசாயிகள், காங்கயம் பிஏபி உதவி செயற் பொறியாளரிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

முறைகேடான பிஏபி பாசன முறையால் வெள்ளகோவில் கிளை கால்வாய் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகியுள்ளது. இதனை முறைப்படுத்த கடந்த பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.

தற்போது நடைபெறும் மூன்றாவது மண்டலத்தின் மூன்றாவது சுற்றில் நீா் அளவீடு செய்ய வேண்டும். ஏற்கெனவே பல ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டு வரும் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனா்.

எனவே, எங்களது வாழ்வாதாரத்தை மீட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நான்கு மண்டலங்களின் நீா் பகிா்மான விவரங்களை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரருள்தந்தை பி.ஜான் போஸ்கோ காலமானார்

ரூ.300 கோடி மோசடி வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

‘தெக்கும் வடக்கும் அகக்கண் திறக்கும்’: கமல்ஹாசன்

தமிழக அரசு மருத்துவமனைகளில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

நான் முதல்வன் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்: ஸ்டாலின் பெருமிதம்

SCROLL FOR NEXT