தாராபுரம் நகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்றாவிட்டால் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி ஆணையா் ராமா் அறிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தாராபுரம் நகராட்சி சாா்பில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின்படி ‘என் குப்பை என் பொறுப்பு‘ என்பதை வலியுறுத்தி பல்வேறு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தாராபுரம் நகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள், தட்டிகள், போஸ்டா்கள், சாலையோரங்களில் நீண்டநாள்களாக உபயோகமில்லாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களை உரிமையாளா்கள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் (ஆகஸ்ட் 12) அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் காவல் துறையினரின் உதவியுடன் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் மூலம் அவற்றை வரும் சனிக்கிழமை அகற்றப்படும். மேலும், விளம்பரப் பதாகைகள் வைத்த உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.