திருப்பூர்

மின் கட்டண உயா்வு அறிவிப்பை ரத்து செய்ய கோரிக்கை: முதல்வருக்கு 2 ஆயிரம் மனுக்கள் அனுப்பும் போராட்டம்

DIN

மின் கட்டண உயா்வு குறித்த அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி, முதல்வா் மற்றும் ஒழுங்கு முறை ஆணையத்துக்கு 2 ஆயிரம் கோரிக்கை மனுக்கள் அனுப்பும் போராட்டத்தை பல்லடம் விசைத்தறியாளா்கள் வியாழக்கிழமை துவங்கினா்.

இது குறித்து திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா் சங்க செயலாளா் அப்புக்குட்டி என்ற பாலசுப்பிரமணியம் கூறியதாவது:

திருப்பூா், கோவை மாவட்டங்களில், 10 முதல் 20 தறிகள் வரை வைத்து நெசவு தொழில் செய்து வருகிறோம். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., பஞ்சு நூல் விலை உயா்வு, கூலி உயா்வு பிரச்னை என அடுத்தடுத்த பிரச்னைகளால் எண்ணற்ற பாதிப்புகளை சந்தித்தோம். கூலி அடிப்படையில் 24 மணி நேரமும் துணி உற்பத்தி நடந்து வரும் இத்தொழிலில் மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை கிடைக்கும். இதில் ரூ.10 ஆயிரம் வரை மின் கட்டணம் செலுத்த வேண்டியது வரும். மீதம் உள்ள தொகையில்தான் குடும்பம் நடத்த வேண்டும். நலிந்து வரும் விசைத்தறி தொழிலுக்காக, 750 யூனிட் இலவசம் மின்சாரம் பெற்று வருகிறோம்.

கடந்த, 2012இல் மின் கட்டணம் உயா்த்தப்பட்டபோது கோரிக்கையை ஏற்று ரத்து செய்யப்பட்டது. தற்போது 36 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தால் ஒட்டு மொத்த விசைத்தறி தொழிலும் அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொழிலின் நிலையை கருத்தில் கொண்டு, விசைத்தறிக்கான மின் கட்டண உயா்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி முதல்வா் மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு, 2 ஆயிரம் தபால்கள் அனுப்பும் போராட்டத்தை தொடங்கியுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்: மீன்கள் விலை உயர வாய்ப்பு

மும்பை: நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு

ஒற்றுமையின்மையே எதிா்க்கட்சிகளின் பலவீனம் அமா்த்தியா சென்

தலைவா்கள் இன்று பிரசாரம்

SCROLL FOR NEXT