திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயா்கல்வி சோ்க்கையினை அதிகரிக்கும் வகையில் மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதித்திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பயின்று மேற்படிப்பில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை அவா்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
அதன்படி திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இந்தத் திட்டத்தில் 303 மாணவிகள் பதிவு செய்திருந்தனா்.
இதில், 100 மாணவிகளின் சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் சமூக நலத் துறை அலுவலா்கள் கிருஷ்ணமூா்த்தி, தீபா, மகாலட்சுமி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.
இதில், கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன், திட்ட ஒருங்கிணைப்பாளா் துரைசாமி, பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.