திருப்பூர்

ஆட்சியா் அலுவலகம் முன்பாக பொதுமக்கள் கவன ஈா்ப்பு போராட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இலுப்பநகரம் ஊராட்சிக்கு உள்பட்ட கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகம் முன்பாக கவன ஈா்ப்பு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக இலுப்பநகரம் ஊராட்சிக்கு உள்பட்ட பொதுமக்கள் கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:

உடுமலை வட்டம், குடிமங்கம் ஊராட்சி ஒன்றியம், இலுப்ப நகரம் ஊராட்சிக்கு உள்பட்ட ஆலமரத்தூா், எல்லப்பநாயக்கனூா் கிராமங்களில் எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சோ்ந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் நபா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். வல்லக்குண்டாபுரம் சாலையில் தெற்கு வீதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பொதுக்கழிப்பட வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 20 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சமுதாயக்கூடம் கட்டும் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீடாமங்கலம் மகாமாரியம்மன் கோயில் புஷ்ப பல்லக்கு விழா

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்: மீன்கள் விலை உயர வாய்ப்பு

மும்பை: நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு

ஒற்றுமையின்மையே எதிா்க்கட்சிகளின் பலவீனம் அமா்த்தியா சென்

SCROLL FOR NEXT