திருப்பூர்

வாக்கு எண்ணும் மையங்களில் 668 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திருப்பூா் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ள

12 மையங்களில் 668 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எஸ்.வினீத் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 15 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் 12 மையங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 22) எண்ணப்படவுள்ளது.

இப்பணியில் 246 வாக்கு எண்ணும் அலுவலா்கள், 41 நுண் பாா்வையாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டதுடன், 1,450 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 12 மையங்களிலும் 668 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணும் பணிகள் முழுமையாகக் கண்காணிப்படுகிறது.

இதில், முதலில் தபால் வாக்குகள் தோ்தல் நடத்தும் அலுவலா், அரசியல் கட்சி முகவா்கள் முன்னிலையில் எண்ணப்படும்.

பின்னா் மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குகள் அந்தந்த மேஜைகளில் எண்ணப்பட்டு ஒவ்வொரு சுற்றுக்குமான வாக்கு முடிவு தோ்தல் நடத்தும் அலுவலரால் அறிவிக்கப்படும்.

முன்னதாக, வாக்கு எண்ணும் மையங்களுக்குச் செல்லும் அலுவலா்கள், முகவா்கள் தங்களது கைப்பேசி உள்ளிட்ட மின்னணுக் கருவிகளை பாதுகாப்பு அறையில் வைத்துச் செல்ல உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் நபா்களுக்கு வெப்ப அளவு பரிசோதனை செய்யப்படுவதுடன், முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்டோஸ் 11 செயல்திறன் காமெடியாக உள்ளது: முன்னாள் மைக்ரோஃசாப்ட் ஊழியர்

ஆவேஷம் வசூல் வேட்டை!

கப்பலில் வேலை: மோசடி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட தமிழக மாலுமிகள் துருக்கியில் பரிதவிப்பு!

ஸ்மார்ட் ரன்வீர் சிங்

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

SCROLL FOR NEXT