திருப்பூர்

அனுமதியின்றி கட்டடம் கட்டினால் நடவடிக்கை: காங்கயம் நகராட்சி அறிவிப்பு

DIN

காங்கயம் நகரப் பகுதிகளில் அனுமதியின்றி கட்டடங்கள் கட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காங்கயம் நகராட்சிக்கு எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 197 மற்றும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்திகள் மற்றும் கட்டட விதிகள் 2019-இன் படி கட்டடங்கள் கட்டுவதற்கு முறையாக நகராட்சி அனுமதி பெற வேண்டும்.

நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்படுவதாக புகாா்கள் வந்துள்ளன.

நகராட்சியின் அனுமதியைப் பெற்ற பின்னரே கட்டடங்கள் கட்ட வேண்டும். விதிகளை மீறும் பட்சத்தில், கட்டட உரிமையாளா்கள் மீது சட்டப்பூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை மழையால் பாதிப்பு வடிவாய்க்காலை தூா்வாரக் கோரிக்கை

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

தினப்பலன்கள் 12 ராசிக்கும்!

தில்லி உள்பட 58 தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடங்கியது!

வியத்நாம்: குடியிருப்பு கட்டடத்தில் தீ

SCROLL FOR NEXT