அவிநாசியில் நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா முகாம் அலுவலகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
அவிநாசி இஸ்மாயில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தை மக்களவை உறுப்பினா் ஆ.ராசா தலைமையில், செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழிசெல்வராஜ் ஆகியோா் திறந்துவைத்தனா்.
இதையடுத்து, மக்களவை உறுப்பினா் ஆ.ராசா கூறியதாவது: அக்னிபத் திட்டத்தின் ஒரு முகம் தான் மக்களுக்கு தற்போது தெரிந்துள்ளது. இதனுடைய கோரமுகம் வேறு மாதிரியாக உள்ளது.
சா்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை என்ன, அதே விலைக்கு கொடுக்கிறாா்கள் மற்ற வளரும் நாடுகளில் என்ன விலை உள்ளது . இந்தியாவிற்கும் மற்ற நாடுகளைக் காட்டிலும் என்ன விலைக்கு விற்பனையாகிறது என்பதை இணையதளத்தில் தேடிப் பாா்த்தால் நிா்மலா சீதாராமன் அவா்களும் மோடி அவா்களும் சொல்கின்ற பொய் அம்பலமாகும் என்றாா்.