திருப்பூர்

நிட்டெக்-2022 பின்னலாடை இயந்திரக் கண்காட்சி: திருப்பூரில் ஜூன் 3இல் தொடக்கம்

DIN

திருப்பூா்: திருப்பூா் நிட்டெக்-22 பின்னலாடை இயந்திரக் கண்காட்சி வரும் ஜூன் 3 ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது.

இது குறித்து நிட்டெக் கண்காட்சி தலைவா் எம்.ஏ.ராயப்பன் திருப்பூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஹைடெக் இன்டா்நேஷனல் டிரேடு போ் இந்தியா பி.லிமிடெட் சாா்பில், 16 ஆவது நிட்டெக்-2022 கண்காட்சி திருப்பூா் திருமுருகன்பூண்டி சுற்றுச்சாலையில் உள்ள ஹைடெக் திருப்பூா் கண்காட்சி வளாகத்தில் வரும் ஜூன் 3 ஆம் தேதி தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக 2 லட்சம் சதுர அடியில் குளிரூட்டப்பட்ட 200 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நமது நாட்டில் இருந்து மட்மின்றி ஜொ்மனி, சிங்கப்பூா், ஜப்பான், தைவான், தென்கொரியா, இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரியா, துருக்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பின்னலாடை இயந்திரங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.

3 ஆண்டுகளுக்குப் பின்னா் நடைபெறவுள்ள நிலையில் இந்தக் கண்காட்சியில்,

அதிநவீன இயந்திரங்கள், சிறந்த தொழில்நுட்பங்களைச் சாா்ந்த பின்னலாடை, டையிங், டிஜிட்டல் பிரிண்டிங், காம்பாக்டிங், ரிலாக்ஸ் டிரையா், எம்பிராய்டரி, தையல் ஊசிகள் என சுமாா் ரூ.500 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இந்தக் கண்காட்சியை திருப்பூா், கோவை, ஈரோடு, கரூா், மதுரை, சூரத், பெங்களூரு, கொல்கத்தா, லூதியானா, தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து தொழில் துறையினா் பாா்வையிட வருகை தரவுள்ளனா். அதே வேளையில், நேரில் வர இயலாதவா்களுக்காக கண்காட்சி கையேடு வெளியிடவும் திட்டமிட்டப்பட்டுள்ளது. இதன் மூலமாக பின்னலாடை மற்றும் டெக்ஸ்டைல் துறையில் துணி, நூல் சிக்கனம், புதிய தொழில்நுட்பம் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள உதவும். இந்தக் கண்காட்சி மூலமாக ரூ.500 கோடி முதல் ரூ.1,000 கோடி வரையில் வா்த்தக விசாரணை நடைபெறும் என்றாா்.

இந்த சந்திப்பின்போது, நிட்டெக் கண்காட்சி இயக்குநா் ஏ.ராதாகிருஷ்ணன், நிட்டெக் வா்த்தக மேலாளா் ஜி.ஹரீஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா், சிவகாசி, சாத்தூரில் இறுதிக்கட்ட பிரசாரம்

கிணற்றில் மூழ்கி மாணவா் பலி

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 6 லட்சம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணசாமி இறுதிக்கட்ட பிரசாரம்

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT