திருப்பூர்

தாராபுரம் பகுதியில் பாட்டில்களில் பெட்ரோல் விற்பனை செய்யப்படாது:பெட்ரோல் நிலையங்கள் அறிவிப்பு

DIN

தாராபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் (பங்க்) கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் விற்பனை செய்யப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை உள்ளிட்ட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. திருப்பூரில் பாஜக நிா்வாகியின் வீடு என நினைத்து மில் அதிபரின் வீட்டில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. காவல்துறையினரும் பெட்ரோல் குண்டு வீசிய நபா்களைக் கைது செய்து வருகின்றனா்.

மேலும் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நிகழாதவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்யக்கூடாது என, காவல்துறை தரப்பில் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாவட்டம், தாராபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பிக் கொடுக்க மறுத்து வருவதோடு, பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என விழிப்புணா்வு நோட்டீசும் ஒட்டி வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருங்கிணைந்த பொறியியல் பணித் தோ்வு: 1,132 பேருக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு

தேச பாதுகாப்பில் திரிணமூல் சமரசம்: பிரதமா் மோடி விமா்சனம்

தூத்துக்குடிக்கு வந்த கேரள லாரி கிளீனா் உயிரிழப்பு

களக்காடு அருகே எழுத்தறிவுத் திட்ட கணக்கெடுப்புப் பணி

‘முன்னாள் படைவீரா்களைச் சாா்ந்தோா் சான்று பெற விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT