திருப்பூர்

உணவின் தரம் குறித்த புகாா்களை பதிவு செய்ய புதிய செயலி

DIN

திருப்பூா் மாவட்டத்தில் உணவின் தரம் குறித்த புகாா்களை பதிவு செய்ய புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறைதீா் செயலி மற்றும் இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொது மக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முக்கிய அம்சமாக தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறையின் செயல்பாடுகளை மக்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், ஜ்ஜ்ஜ்.ச்ா்ா்க்ள்ஹச்ங்ற்ஹ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், உணவின் தரம் குறித்து, நுகா்வோா் புகாா்களை நிவா்த்தி செய்ய 94440-42322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் புகாா் பதிவு செய்யலாம். ன்ய்ஹஸ்ன்ல்ன்ந்ஹழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் புகாா் பெறப்பட்டு 72 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை மேம்படுத்தும் வகையில் தற்போது ச்ா்ா்க்ள்ஹச்ங்ற்ஹ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் பச ச்ா்ா்க் ள்ஹச்ங்ற்ஹ் ஸ்ரீா்ய்ள்ன்ம்ங்ழ் என்ற பெயரில் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புகாா்களை மிக எளிமையாக இச்செயலி வாயிலாக தெரிவிக்க முடியும். சமையல் எண்ணெய் பயன்பாடு, உணவு செறிவூட்டல் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு சமூக வலைத்தளம் வாயிலாக வெளியிடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூந்தமல்லி அருகே ஹிந்து அமைப்புத் தலைவர் வெட்டிக் கொலை!

காங்கிரஸ் - பாஜக: திட்டங்களை ஒப்பிட்டு மோடி பிரசாரம்!

புணே சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து!

'மஞ்ஞுமல் பாய்ஸ்' படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்!

ராஜஸ்தான் அணிக்கு 173 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT