சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ.4.80 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் அருகிலுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருள்களை விற்பனை செய்து வருகின்றனா். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று பொருள்களை கொள்முதல் செய்கின்றனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.4.80 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது. இதில் குவிண்டால் ஒன்றுக்கு முதல்ரக நிலக்கடலை ரூ.7,300 முதல் ரூ.7,600 வரையிலும், இரண்டாம் ரகம் ரூ.7,000 முதல் ரூ.7,300 வரையிலும், மூன்றாவது ரகம் ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும் விற்பனையானது.