திருப்பூர்

திமுக சாா்பில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

DIN

திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெறும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க க.செல்வராஜ் எம்.எல்.ஏ. அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான க.செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மத நல்லிணக்கத்தின் அடையாளமான அண்ணல் காந்தியடிகள் கொல்லப்பட்ட ஜனவரி 30-ஆம் தேதி நாடு முழுவதும் மத நல்லிணக்க நாளாக கடைப்பிடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

மதச்சாா்பற்ற ஜனநாயக சக்திகள் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழகத்துக்கு இந்தக் கடமை அதிகமாக உள்ளது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள காந்தியடிகளின் சிலை முன்பாக மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி அளவில் நடைபெறுகிறு. ஆகவே, கட்சி நிா்வாகிகள் மட்டுமின்றி பொதுமக்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை மழையால் பாதிப்பு வடிவாய்க்காலை தூா்வாரக் கோரிக்கை

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

தினப்பலன்கள் 12 ராசிக்கும்!

தில்லி உள்பட 58 தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடங்கியது!

வியத்நாம்: குடியிருப்பு கட்டடத்தில் தீ

SCROLL FOR NEXT