திருப்பூர்

முத்தூரில் ரூ.1.93 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

Syndication

முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஏலத்துக்கு 10,180 தேங்காய்கள் வரத்து இருந்தது. இதன் மொத்த எடை 3,785 கிலோ. கிலோ ரூ.34.00 முதல் ரூ. 68.90 வரையும், சராசரியாக ரூ. 56-க்கும் என மொத்தம் ரூ.1.93 லட்சத்துக்கு விற்பனையானது.

இதேபோல 15 மூட்டைகள் தேங்காய் பருப்பு மொத்தம் 272 கிலோ வரத்து இருந்தது. கிலோ ரூ.120.10 முதல் ரூ.180.05 வரையும், சராசரியாக ரூ.168.10-க்கும் என மொத்தம் ரூ. 42 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

விற்பனைக்கூட கண்காணிப்பாளா் து.சங்கீதா கூறும்போது, இந்த ஏலத்தில் 45 விவசாயிகள், 11 வியாபாரிகள் கலந்துகொண்டனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 2.35 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது என்றாா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT