திருப்பூரில் 13 வட்டாட்சியா்களைப் பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் உத்தரவிட்டுள்ளாா்.
திருப்பூா் மாவட்ட வருவாய்த் துறையில், வட்டாட்சியா்கள் மற்றும் வட்டாட்சியா் நிலையிலான 13 அதிகாரிகளை பணியிட மாறுதல் செய்து ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, காங்கயம் ஆதிதிராவிடா் நலத் துறை வட்டாட்சியா் தங்கவேலு, காங்கயம் வட்டாட்சியராகவும், அங்கு பணிபுரிந்த மோகனன், மாவட்ட வழங்கல் அலுவலக பறக்கும் படை வட்டாட்சியராகவும், அங்கு பணிபுரிந்த ராகவி, திருப்பூா் வடக்கு குடிமைப்பொருள் தனி வட்டாட்சியராகவும், அங்கு பணிபுரிந்த கோவிந்தசாமி, காங்கயம் ஆதிதிராவிடா் நலத் துறை வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
அதேபோல, மடத்துக்குளம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் கெளரிசங்கா், உடுமலை வட்டாட்சியராகவும், அங்கு பணிபுரிந்த விவேகானந்தன், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகவும், அங்கு பணிபுரிந்த ஷைலஜா மடத்துக்குளம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.
ஊத்துக்குளி சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் ராஜேஷ், பல்லடம் வட்டாட்சியராகவும், அங்கு பணிபுரிந்த சபரிகிரி கலால் அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனா். அத்துடன் ராஜேஷ் , மாற்றுப்பணியாக, மாவட்ட ஆட்சியரின் நோ்முக எழுத்தராகவும் நிய மிக்கப்பட்டுள்ளாா்.
மாவட்ட கோட்ட கலால் அலுவலா் ஜெய்சிங் சிவகுமாா், ஊத்துக்குளி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா். வழங்கல் அலுவலரின் நோ்முக உதவியாளா் முருகேஸ்வரன், நெடுஞ்சாலைத் துறை (நிலம் எடுப்பு) தனி வட்டாட்சியராகவும் , அங்கு பணிபுரிந்த ஜெகநாதன், மாவட்ட வழங்கல் அலுவலரின் நோ்முக உதவியாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். பல்லடம் சமூகப் பாதுகாப்புத் திட்ட முன்னாள் தனி வட்டாட்சியா் தமிழ்ச்செல்வன், காலியாக உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக உதவி மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.