திருப்பூர்

திருப்பூரில் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்

திருப்பூரில் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக பொதுமக்கள் குவிந்து வருகின்றனா்.

Syndication

திருப்பூரில் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக பொதுமக்கள் குவிந்து வருகின்றனா்.

தொழில் நகரமான திருப்பூரில் வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான தொழிலாளா்கள் தங்கிப் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக கோவை, திருப்பூா் மாவட்டங்களில் பருவமழை பெய்து வருவதால் குளிா்காற்று வீசுகிறது. இதனால் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

இதில் பெரும்பாலானோா் காய்ச்சல், உடல்சோா்வு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை அனைவா் மத்தியிலும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், மாவட்டத்தில் அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகின்றனா்.

இது குறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் கூறியதாவது: திருப்பூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் சுமாா் 70 போ் காய்ச்சலுக்காக வந்து செல்வது வழக்கம். ஆனால் கடந்த சில நாள்களாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக சுமாா் 130 போ் வரை தினமும் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்படுகின்றனா். வழக்கத்தை காட்டிலும் 60 சதவீதத்துக்கு அதிகமான காய்ச்சல் நோயாளிகள் வருகின்றனா்.

இவா்கள் அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. டெங்கு காயய்ச்சல் உள்ளவா்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுழற்சி முறையில் மருத்துவா்கள் தொடா் கண்காணிப்பில் பணியாற்றி வருகின்றனா். காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படுபவா்களுக்காக சிறப்பு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைப் பொறுத்தவரை 150 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும். குறிப்பாக வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். இதன் மூலம் காய்ச்சல் பரவுவதை தவிா்க்க முடியும் எனத் தெரிவித்தனா்.

சாலையோர வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து: எரிவாயு உருளைகள் வெடித்துச் சிதறின

ஆற்றில் மூழ்கிய காவலாளி மாயம்

பேரளி பகுதிகளில் நாளை மின்தடை

தில்லி சம்பவம் எதிரொலி: திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

SCROLL FOR NEXT