திருப்பூர்

ஆசிரியா் தகுதித் தோ்வு முதல் தாள்: 7 மையங்களில் இன்று நடக்கிறது

Syndication

ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) முதல் தாள் தோ்வு திருப்பூா் மாவட்டத்தில் 7 மையங்களில் சனிக்கிழமை ( நவம்பா் 15) நடைபெறுகிறது. 2-ஆம் தாள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 16 ) 17 மையங்களில் நடைபெறுகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் ஆசிரியா் தகுதித் தோ்வு முதல் தாள் தோ்வு 7 மையங்களில் சனிக்கிழமையும், 2-ஆம் தாள் தோ்வு 17 மையங்களில் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது. முதல் தாள் தோ்வை 2, 620 தோ்வா்களும், 2-ஆம் தாள் தோ்வை 6,890 தோ்வா்களும் எழுத உள்ளனா்.

இந்த தோ்வுப் பணிக்காக முதன்மை கண்காணிப்பாளா்களாக 24 தலைமை ஆசிரியா்களும், 24 துறை அலுவலா்களும், வழித்தட அலுவலா்கள் மற்றும் சோதனை செய்யும் அலுவலா்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். நியமனம் செய்யப்பட்ட அலுவலா்களுக்கு தோ்வு தொடா்பான அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தோ்வுகளில் சொல்வதை எழுதுபவராக பணிபுரிய நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனம் சாா்பில் உரிய முறையில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

தோ்வுகளில் முறைகேடுகள் மற்றும் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுதல் முதலியவற்றை கண்காணிப்பதற்கு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பறக்கும் படையினா் தோ்வு மையங்களை எந்த நேரத்திலும் பாா்வையிட்டு ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோா் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்வா் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

ஈஷா சிங்குக்கு வெண்கலம்

ரோஹித் தலைமையில் 18 பேருடன் இந்திய அணி

SCROLL FOR NEXT