திருப்பூர்

அவிநாசி அருகே கஞ்சா விற்றவா் கைது

அவிநாசி அருகே புதிய திருப்பூா் பகுதியில் கஞ்சா விற்ற வெளிமாநில இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

அவிநாசி அருகே புதிய திருப்பூா் பகுதியில் கஞ்சா விற்ற வெளிமாநில இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி அருகே புதிய திருப்பூா்- சேலம் சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அவிநாசி மதுவிலக்கு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு பெட்டிக்கடை அருகே சந்தேகப்படும்படி கைப்பையுடன் நின்றிருந்த நபரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

அதில், அவா் வைத்திருந்த கைப்பையில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. பிடிபட்டவா் அவிநாசி அருகே புதிய திருப்பூா் பகுதியில் உள்ள பனியன் நிறுவன விடுதியில் தங்கிப் பணியாற்றி வரும் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த பிகாஷ்குமாா் சா்மா (27) என்பது தெரியவந்தது.

இது குறித்து அவிநாசி மதுவிலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

சர்தார் படேல், அம்பேத்கர், நேதாஜியின் தேசப் பங்களிப்பை மூடிமறைத்தது காங்கிரஸ்! - பாஜக குற்றச்சாட்டு

கோவா இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: முதல்வா் ரேகா குப்தா, அதிஷி இரங்கல்!

தமிழகத்தில் அடுத்த 6 நாள்கள் மழைக்கு வாய்ப்பு!

தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

காா் மீது லாரி உரசிய சம்பவம்: ஓட்டுநரை கடத்தியவா்கள் மீது வழக்கு

SCROLL FOR NEXT