திருப்பூர்

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்

திருப்பூரில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கால நிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆட்சியா் மனீஷ் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

திருப்பூரில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கால நிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆட்சியா் மனீஷ் அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தேங்கி நிற்கும் நீரில் இருந்து உற்பத்தியாகும் கொசுக்கள் வாயிலாக டெங்கு காய்ச்சல் பரவும் வாய்ப்பு இருப்பதால், கிராம ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிா்வாகங்கள் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

அரசின் அறிவுறுத்தல்படி, அனைத்து குக்கிராமங்களிலும் ஒட்டுமொத்த துாய்மைப்பணி மேற்கொள்ள வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். பாதுகாப்பான குடிநீா் விநியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும். கிராம ஊராட்சிகளில் மாதம் இருமுறை மேல்நிலை மற்றும் தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும், குளோரின் கலக்கப்பட்ட குடிநீா் விநியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

தெளிந்த நீருள்ள தொட்டி, பயன்பாடற்ற பானைகள், குளிா்சாதனப் பெட்டியின் பின்புறம், பழைய டயா், தேங்காய் சிரட்டை, செடிகள் வளா்க்கும் தொட்டி, புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் தண்ணீா் தேங்க வாய்ப்புள்ள இடங்களில் நீா் தேங்காமலும், அதன் வாயிலாக கொசுக்கள் உற்பத்தியாகாமலும் தடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா்.

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT