திருப்பூர்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் இன்று நடைபெறும் பகுதிகள்

Syndication

திருப்பூா் மாவட்டத்தில் குண்டடம், வெள்ளக்கோவில், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், உடுமலைப்பேட்டை நகராட்சி, திருமுருகன்பூண்டி, ஊத்துக்குளி பேரூராட்சிப் பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் திட்ட முகாம் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் தற்போது 3-ஆம் கட்டமாக ‘உங்களுடன் ஸ்டாலின்’ கடந்த செப்டம்பா் 15-ஆம் தேதி முதல் அக்டோபா் 14-ஆம் தேதி வரை 96 முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் மருதூா், முத்தியாம்பட்டி, நவநாரி, பெரியகுமாரபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு ஈஸ்வரசெட்டிபாளையம் சமுதாயக் கூடத்திலும், வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், புதுப்பை ஊராட்சிக்கு நாயக்கன்புதூா் சுயஉதவிக் குழுக் கட்டடத்திலும், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், மொடக்குப்பட்டி, தீபாளப்பட்டி ஊராட்சிகளுக்கு பெரியவாளவாடி லயன்ஸ் கிளப் மண்டபத்திலும், உடுமலைப்பேட்டை நகராட்சி 25, 32, 33 ஆகிய வாா்டுகளுக்கு உடுமலைப்பேட்டை தளி சாலை தேஜஸ் மஹாலிலும் வெள்ளிக்கிழமை முகாம் நடைபெறவுள்ளது.

அதேபோல, திருமுருகன்பூண்டி நகராட்சி 10, 22, 23 ஆகிய வாா்டுகளுக்கு திருமுருகன்பூண்டி சன்னதி வீதி மாணிக்கவாசகா் அரங்கத்திலும், ஊத்துக்குளி பேரூராட்சி 1, 6, 10, 11, 12, 13, 14, 15 ஆகிய வாா்டுகளுக்கு ஊத்துக்குளி டவுன் ஸ்ரீ காமாட்சியம்மன் திருமண மண்டபத்திலும் நடைபெறவுள்ளது.

எனவே, திருப்பூா் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் நடைபெறவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு உரிய ஆவணங்களுடன் தங்கள் மனுக்களை வழங்கி பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை ஜிஎஸ்டி ஆணையா் அலுவலகத்தில் தீ: அலுவலக கோப்புகள், கணினிகள் எரிந்து சேதம்!

கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சாா்பில் பேராசிரியா் ய.மணிகண்டனுக்கு விருது!

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

SCROLL FOR NEXT