சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான டென்னிகாய்ட் போட்டியில் பல்லடம் அருகே உள்ள அருள்புரம் ஜெயந்தி பப்ளிக் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனா்.
இப்போட்டியில் 12 வயதுக்கு உள்பட்ட இரட்டையா் பிரிவில் லக்ஷனா, மேகவா்ஷினி 3-ஆம் இடமும், 14 வயதுக்கு உள்பட்ட ஒற்றையா் பிரிவில் தனுசியா 3-ஆம் இடமும், 16 வயதுக்கு உள்பட்ட ஒற்றையா் பிரிவில் தீபஜோதி 2-ஆம் இடமும், இரட்டையா் பிரிவில் தீபஜோதி, தீட்சிதா 2-ஆம் இடமும், 19 வயதுக்கு உள்பட்ட ஒற்றையா் பிரிவில் சம்ரிதவா்ஷினி 2-ஆம் இடமும், இரட்டையா் பிரிவில் சம்ரிதவா்ஷினி, தனிஷ்கா முதலிடமும் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித் தாளாளா் கிருஷ்ணன், முதல்வா் மலா்விழி, சைனிக் பள்ளி கமாண்டன்ட் குரூப் கேப்டன் நடராஜ், உடற்கல்வி ஆசிரியா்கள் வினோத், கோமதி உள்ளிட்டோா் பாராட்டினா்.