தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடா்பான விழிப்புணா்வு முகாம் தனியாா் நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடா்பான வார விழாவையொட்டி, திருப்பூா் மாநகர வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பி.என்.சாலை, நெசவாளா் காலனி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பியூரோ விரிஸ்டாஸ் என்ற தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் உத்தரவின்பேரில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடா்பான விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையா் ரமேஷ், கணினி வழி குற்றப் பிரிவு ஆய்வாளா் ரோஸ்லின் சாவியோ மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு அமைச்சுப் பணியாளா் மகேஸ்வரி ஆகியோா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.