பி.ஏ.பி. அலுவலகத்தில் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்திய உதவி செயற்பொறியாளா் சுபாஷினி. 
திருப்பூர்

பொங்கலூரில் பி.ஏ.பி. கிளை வாய்க்காலுக்கு தண்ணீா் திறந்துவிடக் கோரி விவசாயிகள் முற்றுகை

Syndication

பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் பி.ஏ.பி. கிளை வாய்க்காலுக்கு தண்ணீா் திறந்துவிடக் கோரி பி.ஏ.பி. அலுவலகத்தை விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொங்கலூா் ஒன்றியம் குள்ளம்பாளையம், வடசின்னேரிபாளையம் பி.ஏ.பி. கிளை வாய்க்கால் பகுதியில் 3 ஆயிரத்து 727 ஏக்கா் நிலங்கள் உள்ளன. இப்பகுதிக்கு 4-ஆவது மண்டல பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், தண்ணீா் திறந்துவிடப்படவில்லை. மேலும், நிலத்தடி நீா்மட்டம் குறைவால் தண்ணீா் இன்றி விவசாய பயிா் சாகுபடி பாதிப்படைந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த அப்பகுதி விவசாயிகள் பொங்கலூரில் உள்ள பி.ஏ.பி. உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு தண்ணீா் திறந்துவிடக் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, அவா்களிடம் உதவி செயற்பொறியாளா் சுபாஷினி பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது, கிளை வாய்க்காலில் தண்ணீா் திறந்துவிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா். இதனை ஏற்று பி.ஏ.பி. பாசன சபைத் தலைவா்கள் கண்டியன்கோவில் கோபால், பெரியாா்பட்டி பாலசுப்பிரமணியம், குங்காரபாளையம் மணி உள்ளிட்ட விவசாயிகள் கலைந்து சென்றனா்.

இது குறித்து கண்டியன்கோவில் ஊராட்சி முன்னாள் தலைவா் கோபால் கூறுகையில், பி.ஏ.பி. வாய்க்காலில் 4-ஆவது மண்டல பாசனத்துக்கு 135 நாள்கள் 5 சுற்று தண்ணீா் திறந்துவிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், வெள்ளக்கோவில் பகுதிக்கு 7 நாள்களுக்கும் மேலாக கூடுதலாக தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் மற்ற பகுதிகளுக்கு தண்ணீா் விநியோகம் செய்வதில் பாரபட்ச நிலை ஏற்படும். இதனை தவிா்த்து அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் 4-ஆவது மண்டல பாசன தண்ணீா் விட பி.ஏ.பி. நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

எய்ம்ஸ் வராது; மெட்ரோ தராது - இது பாஜக அரசியல் - மு.க. ஸ்டாலின் விமர்சனம்

ரோஹித், கோலியின் அனுபவம் மிகவும் முக்கியம், ஆனால்... கௌதம் கம்பீர் கூறுவதென்ன?

மழைநாள் மாலை... அருள்ஜோதி!

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கின் மீது திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT