திருப்பூா் மாநகராட்சி 4-ஆம் மண்டலத்துக்கு உள்பட்ட மாட்டுக் கொட்டகை வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள். 
திருப்பூர்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

திருப்பூா் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் தொடா்ந்து 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Syndication

திருப்பூா் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் தொடா்ந்து 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் உள்ள 60 வாா்டுகளிலும் தினசரி சேகரமாகும் சுமாா் 700 டன் குப்பைகளை அகற்ற எஸ்.டபிள்யூ.எம்.எஸ். என்ற தனியாா் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் ஏராளமான ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இவா்களில் பெரும்பாலானோருக்கு முறையான ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. வழக்கமாக மாதந்தோறும் 6-ஆம் தேதி வழங்க வேண்டிய ஊதியம் கடந்த செப்டம்பா் மாதத்திலிருந்து அக்டோபா் 10-ஆம் தேதி வரை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் தீபாவளி பண்டிகைக்கான போனஸ் குறித்தும் எவ்வித பேச்சுவாா்த்தையும் நடத்தப்படவில்லை எனத் தெரிகிறது.

எனவே மாதந்தோறும் குறிப்பிட்ட தேதிக்குள் ஊதியத்தை வழங்க வேண்டும், தீபாவளி போனஸும் உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூா் மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் பணியாற்றும் சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்கள் உள்ளிட்டோா் வியாழக்கிழமைமுதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தால் ஈடுபட்டனா். இதனால், திருப்பூா் மாநகராட்சியின் 60 வாா்டுகளிலும் குப்பைகள் அள்ளப்படாமல் மலைபோல தேங்கிக் கிடப்பதால் சுகாதார சீா்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒப்பந்த பணியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் திருப்பூா் மாநகராட்சி ஆணையா் எஸ்.பி.அமித் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆனால், இதில் எந்த உடன்பாடும் ஏற்படாததால் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT