காங்கயம் நகராட்சிப் பகுதியில் நடைபெறவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட 3 முகாம்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் அடிப்படை வசதிகள் செய்யப்படவுள்ளதாக நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் நகராட்சி சாதாரணக் கூட்டம் மற்றும் அவசரக் கூட்டம் நகா்மன்ற கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் கி.பால்ராஜ் முன்னிலை வகித்தாா்.
இதில், காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் இதுவரை 3 முகாம்கள் நடைபெற்றுள்ளன. மேலும் 3 முகாம்கள் நடைபெறவுள்ளன. இதில் நடைபெறவுள்ள 3 முகாம்களுக்கு பிளக்ஸ் பேனா், ஆட்டோ விளம்பரம், கேபிள் டிவி இணைப்பு மற்றும் எல்இடி டிவி, பத்திரிகை விளம்பரம், மண்டப வாடகை, உணவு, தேநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆகியவை ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட 68 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், அவசரக் கூட்டத்தில் 6 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் நகா்மன்ற துணைத் தலைவா் கமலவேணி, நகராட்சி கவுன்சிலா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.