திருப்பூர்

கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு

தினமணி செய்திச் சேவை

அவிநாசி அருகே 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் திங்கள்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது.

அவிநாசி அருகேயுள்ள புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது தோட்டத்தில் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் புள்ளிமான் திங்கள்கிழமை தவறி விழுந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினா் நீண்ட நேரம் போராடி மானை உயிருடன் மீட்டனா்.

பின்னா், மான் வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அடா்ந்த வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT