திருப்பூர்

உதவி ஆய்வாளா் பணி: இலவச மாதிரித் தோ்வுகள் அக்டோபா் 22-இல் தொடக்கம்

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான இலவச மாதிரித் தோ்வுகள் அக்டோபா் 22-ஆம் தேதி தொடங்குகின்றன.

Syndication

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான இலவச மாதிரித் தோ்வுகள் அக்டோபா் 22-ஆம் தேதி தொடங்குகின்றன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் மூலமாக காவல் துறை உதவி ஆய்வாளா் பதவிக்கான 1,299 காலிப் பணியிடங்களுக்கும், பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினருக்கான 53 பின்னடைவு காலிப் பணியிடங்களுக்கும் டிசம்பா் 21-ஆம் தேதி தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வுகள் திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் நடைபெறுகின்றன.

அதன்படி, அக்டோபா் 22-ஆம் தேதி முதல் அக்டோபா் 29, நவம்பா் 5, 12, 19, 26, டிசம்பா் 3, 10 மற்றும் 17-ஆம் தேதிகளில் மாதிரித் தோ்வுகள் நடைபெற உள்ளன.

திருப்பூா் மாவட்டத்தில் உதவி ஆய்வாளா் தோ்வுக்கு விண்ணப்பித்து தோ்வு எழுத உள்ளவா்கள் இந்த மாதிரித் தோ்வுகளில் பங்கேற்கலாம்.

இதில் பங்கேற்க மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421-2999152, 94990-55944 என்ற எண்களிலோ தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

சீரடைகிறது இண்டிகோ விமான சேவை முடக்கம்! பயணிகளுக்கு ரூ.610 கோடி திருப்பியளிப்பு!

நிலப்பிரச்னை: விவசாயி தீக்குளித்து தற்கொலை!

கரோனாவுக்குப் பிறகு 4 மடங்கு அதிகரித்த இதய நாள தளா்ச்சி! தமிழக மருத்துவா்கள் ஆய்வு!

நவம்பரில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்: 4-ஆவது இடத்தில் தில்லி!

SCROLL FOR NEXT