பல்லடம் அருகே தனியாா் நிலத்தில் மான் உயிரிழந்து கிடந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பொங்கலூா் ஒன்றியம், கண்டியன்கோவில் அருகேயுள்ள தனியாா் நிலத்தில் மான் உயிரிழந்து கிடந்தது. இதைப் பாா்த்த பொதுமக்கள் வனத் துறையினருக்கு புதன்கிழமை தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் மானின் உடலை மீட்டு ஆய்வு செய்தனா்.
இதில், உயிரிழந்தது சுமாா் 1 வயது மதிக்கத்தக்க மான் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அதே இடத்தில் மானின் உடல் புதைக்கப்பட்டது.
தலையில் காயங்கள் இருந்ததால் கம்பி வேலியில் மோதி மான் உயிரிழந்து இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.